Home » Personalization » Punithargal
Punithargal Apk

Punithargal 1.0 APK

  • Version: 1.0
  • File size: 4.26MB
  • Requires: Android 5.0+
  • Package Name: com.punithargal.punithargalsaints
  • Developer: Finserv Technologies Pvt Ltd
  • Updated Dec 08, 2018
  • Price: Free
  • Rate 4.90 stars – based on 12 reviews
What's New?

Collapse

Punithargal App

This is app is all about saints and their miracles and their work for Christianity.


punithargal videos , punithargal news, punithargal photos, calender , saints, all the category list, marian feast, notes, punithgal quotes, punithargal Name List.


Complete video description is narrated by father Joe.

PUNITHARGAL SAINTS

இயக்குநர் பேசுகிறார்

மதிப்பிற்குரிய இறைமக்கள் சமூகத்திற்கு

வணக்கம்.

உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள் என்கிற இயேசுவின் இறுதிக்கட்டளையை செயல்படுத்த இறைவன் நமக்களித்த மாபெரும் வரமே இணையதளம். இயேசுவின் அன்றைய சீடர்கள் வலையை கொண்டு மீன்பிடித்தது போன்று இயேசுவின் இன்றைய சீடர்கள் வலைத்தளத்தை கொண்டு மனிதர்களை பிடிப்பராக முடியும்.

ஆசியா கண்டம் போன்று ஐரோப்பா கண்டம் போன்று ஆப்ரிக்கா கண்டம் போன்று இணையதளம் என்கிற கண்டமும் கிறிஸ்துவுக்காக அறுவடை செய்யப்பட வேண்டுமென்று திருத்தந்தை. பிரான்சிஸ் அழைப்பு விடுக்கின்றார்.

இன்று இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 200 கோடியை எட்டியுள்ள நிலையில் 80 சதவீத இளையோர் இணையதளத்தில் அதிகமான நேரத்தை செலவிடும் இன்றைய சூழலில் கடமையுணர்வு கொண்ட மேய்ப்பர்களாகிய நாம் அதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்கிறார் திருத்தந்தை. ஆகவே இணையதளத்தின் வழியாய் மறைபரப்பு பணி செய்ய வேண்டிய இக்காலக்கட்டத்தில் புனிதர்கள் செயலி மற்றும் வலைத்தளம் வரப்பிரசாதமாக உதயமாகியுள்ளது. கடந்த 2017 பிப்ரவரி 04 தேதி முதல் முழுவீச்சுடன் தயாராகி வருகின்றது. இன்னும் முழுமையான பயணத்தில்

குருத்துவத்தில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்யும் மேதகு. ஆயர். ஜீடு பால்ராஜ் பொன்விழா நாயகர் விவிலியக்கடல் பேரருட்திரு. ஜோமிக்ஸ் அவர்களின் வழிகாட்டுதலில்ää அருட்சகோதரி. ஐடா மேரி ழுளுஆ மற்றும் ளுஆஆஐ நவதுறவிகள் எழுத்தில்

கீழ்பாக்கம் நேர்ச்சை திருத்தல மறைக்கல்வி மாணவ ஆசிரியர்களின் குரலில்

லொயோலா கல்லூரி காட்சி தொடர்பியல் விஸ்காம் மாணவர் பாளையங்கோட்டை மறைமாவட்டம் அருட்பணி. ஜோ வர்கீஸ் இயக்கத்தில் உருவானது இத்தளம்.

இத்தளத்தின் சிறப்பு அம்சங்கள்

தமிழில் புனிதர்களுக்கான முதல் இணையத்தளம்;;
70க்கும் மேற்பட்ட பிரிவுகளில் புனிதர்கள்.
அன்றாட புனிதர்களின் ஆன்மீகத்தை அறிமுகம் செய்யும் வீடியோக்கள்
தினமும் 4 முதல் 7 நிமிட வீடியோக்கள்
வீடியோவில் முத்தான மூன்று பகுதிகள்
நடைமுறைப்பயிற்சிகள்
மேய்ப்பர்களாகிய நாம் இத்தளத்தை சிறப்பாக பயன்படுத்த வழிமுறைகள்:

ஞாயிறுதோறும் மறைக்கல்வி வகுப்புகளில் குழந்தைகள் அகன்ற திரையில் காண்பதற்கு ஏற்பாடு செய்யலாம்.
வலைத்தளத்தில் சிக்குண்ட இளையோருக்கு புனிதர்கள் இணையதளத்தை மாற்றுப்பாதையாக பயன்படுத்த வழிகாட்டலாம்.
குழந்தைகள் இளையோர் மற்றும் பெரியவர்களுக்கு புனிதர்களின் வீடியோக்களிலிருந்து போட்டி நடத்தி பரிசு வழங்கலாம்.
பங்கிலுள்ள பக்தசபைகள் கூடுமிடங்களில் புனிதர்களின் வீடியோக்களை தியானிக்க உற்சாகப்படுத்தலாம்.
அன்பியக்கூட்டங்களில் அன்றைய புனிதரின் வாழ்வை அல்லது தாங்கள் தேர்ந்தெடுக்கும் புனிதர்களின் வாழ்வை நற்செய்தியோடு பொருத்தி தியானிக்க அறிவுறுத்தலாம்.
திருப்பலி துவங்குவதற்கு முன்பு அல்லது திருப்பலி முடிந்த பின்பு ஆலயங்களில் பயன்படுத்தலாம்.
பங்கிலுள்ள வாட்ஸ்அப் பேஸ்புக் குழுக்களுக்கு தினந்தோறும் பகிரலாம்.
ஞாயிறு மற்றும் விழாக்கால அறிவிப்புகள் வழியாக மக்கள் இத்தளத்தைப் பயன்படுத்திட அறிவுறுத்தலாம்.
மறையுரையில் பயன்படுத்த குறிப்புகள் எடுத்துக்கொள்ளலாம்.
கடந்த 20 மாதங்களாக தயாராகிவரும் இத்தளத்தில் அருட்பணியாளர் அருட்சகோதரிகள் நவதுறவிகள் மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்ää இறைமக்கள் என பல்வேறுநிலையினர் இத்தளத்திற்காக தங்களது பங்களிப்பை வௌ;வேறு வடிவங்களில் தந்துகொண்டிருக்கிறார்கள். இம்முயற்சியானது இறைமக்களை சென்றடைய உங்களது மேலான ஒத்துழைப்பையும்ää செபத்தையும் வேண்டுகிறேன்.

நன்றிகளுடன்

அருட்பணி. ஜோ வர்கீஸ்

இயக்குனர் புனிதர்கள் இணையதளம்

தொடர்புக்கு
வாட்ஸ் அப் : 8300 1900 88

இமெயில் : [email protected]

Show More
Old Versions